எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து ஆரம்பம்...!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து ஆரம்பம்...!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக பயன்ப்படுத்தப்படும் மற்றும் சுற்றுலா பயணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட  பேரூந்துக்களை தேவை ஏற்ப்பட்டால் மாத்திரம் பொது போக்குவரத்திற்காக பயன்ப்படுத்தலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ற அளவிலேயே ஆட்களை ஏற்றி செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.