நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்று கொவிட்-19 நோயுடன் அடையாளம் காணப்பட்ட 597 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 256 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 62 பேரும், கேகாலை மாவட்டத்தில் 50 பேரும் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 34 பேரும்,
கண்டி மாவட்டத்தில் 33 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 20 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 5 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பேரும் பதிவாகியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 3 பேரும், யாழ்ப்பாணம், பதுளை, காலி
ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவரும் கொவிட்-19 நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 256 நோயாளர்களுள், அதிகமானவர்கள் நாரஹேன்பிட்டி பகுதியில் பதிவாகியுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் 79 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், பொரளையில் 60 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.