கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் பலி...!
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.