ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ.;மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, வேறு கட்சிகளுடன் இணைந்து எதிர்காலத்தில் கட்டியெழுப்பபடவுள்ள கூட்டணியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்காக ஆயிரம் பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்திநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.