ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவாி முதல் ஆரம்பிக்கத் திட்டம்!

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவாி முதல் ஆரம்பிக்கத் திட்டம்!

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கல்வி அமைச்சுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது.

இதன்போது எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கான விடுமுறைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சின் ஊடாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் பகுதிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில், அந்த பகுதிக்கான கல்வி வலயப் பணிப்பாளர் பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பாடசாலை நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.