கொழும்பு மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..!
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என கொவிட் 19 ஐ ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 616 பேரில் 266 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொரளையில் 65 பேரும் மட்டக்குளியில் 62 பேரும், கொம்பனித்தெருவில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் 99 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 94 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.