கொரோனா அச்சம் – மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் – மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 42 பேர் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.