மின் சாதன பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்..!

மின் சாதன பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்..!

உள்நாட்டு சேவைகளுக்கு முதலிடம் கொடுத்து நாட்டில் மின் சாதனங்கள் தயாரிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் நேற்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது மின் சதனங்கள் உற்பத்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்பிக்க 06 பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.