கட்டுவாப்பிட்டி வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்..!
முன்னைய அரசாங்கம் உறுதிமொழிகளை மாத்திரமே வழங்கியதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு தேவையான விடயங்களை செய்வதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கர்தினால் உடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஏப்ரல்21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டுவாப்பிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு, பொறியியலாளர் கூட்டுத்தாபனத்துக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.