
ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் திகதி ஒத்திவைப்பு..!
2016 - 2018 கல்வி ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கலாசாலைகளில் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திகதியில் விண்ணப்பிக்க முடியும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் விண்ணப்பத்தாரிகளின் தகவல்கள் இணையத்தளம் வாயிலாக சேகரிக்கப்படுவதாகவும், விண்ணப்பத்தாரிகள் https;//ncoe.moe.gov.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.