தீப்பரவல் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய 3 குழுக்கள் விசாரணைகளில்..!

தீப்பரவல் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய 3 குழுக்கள் விசாரணைகளில்..!

புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று ஏற்பட்டத் தீப்பரவல் தொடர்பாக காவற்துறை மா அதிபரின்ஆலோசனைக்கு அமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவின் 3 குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, காவற்துறையினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதற்குப் பின்னர், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையினை குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் சமர்ப்பிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினர், பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலில் உயர்நீதிமன்றின் ஆவணங்கள் எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.