வடக்கிலுள்ள 535 பாடசாலைகளில் 130 பாடசாலைகளுக்கு பூட்டு

வடக்கிலுள்ள 535 பாடசாலைகளில் 130 பாடசாலைகளுக்கு பூட்டு

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 130 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலுள்ள 69 பாடசாலைகளுக்கும், வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைகளுக்கும், வவுனியா கல்வி வலயத்திலுள்ள 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவியொருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து, வவுனியா கல்வி வலயத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் – வலிகாமம் மற்றும் உடுவில் பகுதிகளில் தொடர்ச்சியாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் 535 பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், எஞ்சியுள்ள 395 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எந்தவித இடையூறுகளும் இன்றி நடைபெற்று வருகின்றன.

முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகள் பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்