வட்டவளை பிரதேசத்தில் விபத்தொன்றில் ஒருவர் பலி!

வட்டவளை பிரதேசத்தில் விபத்தொன்றில் ஒருவர் பலி!

வட்டவளை பிரதேசத்தில் லோடர் வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இவ்வனர்த்தத்தில் மஸ்கெலியாவைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

கருங்கற்கள் சிலவற்றை ஏற்றுவதற்காக வருகை தந்துகொண்டிருந்த லோடர் வாகனத்தின் சாதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

உயிாிழந்தவாின் சடலம் தற்போது வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.