மேலும் 511 பேர் தாயகம் திரும்பினர்

மேலும் 511 பேர் தாயகம் திரும்பினர்

வௌிநாடுகளில் இருந்து இன்று காலை மேலும் 511 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

அதன்படி, மாலைத்தீவில் இருந்து UL 104 விமான ஊடாக 36 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 93 பயணிகளும் டுபாயில் இருந்து UL 226 விமான ஊடாக 52 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும் இன்று (16) கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 48 பயணிகளும் பங்காளதேஷில் இருந்து UL 190 விமான ஊடாக 42 பயணிகளும் இந்தியாவில் இருந்து UL 1042 விமான ஊடாக 46 பயணிகளும் சிங்கபூரில் இருந்து UL 303 விமானம் ஊடாக 07 பயணிகளும் மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 01 பயணியும் சீனாவில் இருந்து UL 881 விமானம் ஊடாக 04 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.