கொவிட்-19 தொற்றாளர்களுக்கான புதிய சிகிச்சை மத்திய நிலையங்கள்...!
அதிக மக்களுக்கு சிகிச்சை வழங்கவும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் கூடிய வைத்தியசாலைகளை தம் வசப்படுத்திக் கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு உடனடியாக அவ்வைத்தியசாலைகளை கொவிட்-19 சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கும் தீர்மானித்துள்ளதாக தொிவிக்கடுகின்றது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியின் தலைமையில் கொவிட்-19 ஒழிப்பிற்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று சுகாதார அமைச்சில் கூடியபோதே அவர் இதனைத் தொிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்று காரணமாக நாள்தோறும் 500-600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படுவதால் இவர்களுக்கான சிகிச்சை நிலையங்களை உடனடியாக ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீட்டை அமைச்சரவையிலும் மேலதிக தேவைகளுக்கு உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.