வெலிசறை மார்பு நோய் மருத்துவமனையில் தப்பியோடிய நபாின் புகைப்படங்கள் சற்று முன்னர் வெளியாகின...!
வெலிசறை மார்பு நோய் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட்-19 நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
43 வயதுடைய நோயாளியான இவர் காச நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த நபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
