ஆபத்து அதிகரிக்க நேரிடலாம்! எச்சரிக்கிறது பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம்
எதிர்வரும் பண்டிகை காலத்தின் முடிவில் நாட்டில் கொரோனா தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பண்டிகை காலத்திற்கு முன்னதாக மாவட்டங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சம்மேளனத்தின்; தலைவர் உபுல் ரோஹான இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்காக முடக்கல் நிலையை விதிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பயணிப்பதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தமுடியும்.
இதன்போது பொதுமக்களின் நடமாட்டதை குறைப்பதே மிக முக்கியமானது என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டுள்ளார்கள். எனவே பண்டிகை காலத்திற்கு முன்னதாக எல்லைகளுக்கு இடையிலான கட்டுப்பாடுகள்
விதிக்கப்படாவிட்டால் கொரோனா தொற்றில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் என்றும் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்கள் இன்னும் அறியப்படாத நேர்மறையான தொற்றுக்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதன் காரணமாகவே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்று கூறவேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.