மீண்டும் திறக்கப்படவுள்ள பேலியகொடை மீன் சந்தை...!
பேலியகொடை மீன் சந்தை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட பேலியகொடை மீன் சந்தை இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படவுள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.