மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் உடனடியாக முடிந்தளவு நடமாட்டங்களை மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர,

மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மக்கள் நடமாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 4ம் திகதி முதல் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை வைரஸ் கொத்தணி மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவாயிரத்து 59 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை சுற்றாடலில் இனங்காணப்பட்டுள்ளவர்கள் என்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புள்ளவர்கள் 26 ஆயிரத்து 774 பேர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த கொத்தணிகள் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளதாகவும் எவ்வாறெனினும் அந்த கொத்தணிகளில் இனங்காணப்பட்ட வைரஸ் தொற்று நோயாளிகளில் 20 ஆயிரத்து 901 பேர் பூரண சுகமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.