விமானியின் சரீரம் மீதான பிரேத பரிசோதனை இன்று...!
கந்தளாய் - சூரியபுர - ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் நேற்று அனர்த்த்திற்குள்ளான விமானத்தின் சிக்கி உயிரிழந்த பயிற்சி பெறும் விமானியின் சரீரம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இந்த பரிசோதனை இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து அவரது சரீரம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
பயிற்சி விமான வாரத்திற்காக திருகோணமலை சீனக் குடா விமானப்படை விஞ்ஞான பீடத்தில் இருந்து நேற்று பிற்பகல் புறப்பட்டது.
கந்தளாய் - சூரியபுர பகுதியில் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட அனர்த்தத்தில் விமானத்தின் விமானி பலியானார்.
சம்பவத்தில் ருவான்வெல்ல - மாபிட்டிய பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக விமானப்படை தளபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் நேற்று மாலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.