உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்..!
இலங்கையில் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு மேலும் சில பகுதிகளை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய பாணந்துறை தொட்டவத்தை, மொனராகலை - படல்கும்புர மற்றும் அலுபொத்த ஆகிய பகுதிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கட்டயாம் அடியொற்றுதல் அவசியம் எனவும் அதனை மீறுகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.