தீப்பரவல் முழுமையாக கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..!

தீப்பரவல் முழுமையாக கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..!

கொழும்பு - அழுத்கடை உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 9 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.