மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான விரைவான வழிமுறைகளை ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு..!
காற்றுஇ சூரிய சக்தி மற்றும் இயற்கை வாயு ஆகிய வளங்களின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான விரைவான வழிமுறைகளை ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இந்த உத்தரவை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில் 2030ம் ஆண்டாகும் போது இலங்கைக்குத் தேவையான மின்சாரத்தில் 70 சதவீதமானது மீளுருவாக்கக்கூடிய சக்தி வளங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது தனியார் துறையினருக்குஏற்படுகின்ற தடைகளை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.