
நாடளாவிய ரீதியில் களத்தில் இறங்கியது இரகசியக் குழு!
நாடளாவிய ரீதியில் சுகாதார விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்டுபிடிக்க இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஸ் சேவைகள், ரயில்கள் மற்றும் மோட்டார் கார் என்பவற்றிலும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்காக இரகசியக் குழுவினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் சுகாதார விதிமுறைகளை மீறிய 34 பேருந்துகளின் உரிமங்கள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்யும் போது நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு அமையவே பயணிகளை ஏற்ற வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட போதும், அவை மீறப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.