நீதிமன்ற கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம்..!

நீதிமன்ற கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம்..!

கொழும்பு - புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் தீணைப்பு பிரிவில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்வரப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்கசிவின் காரணமாக இந்த தீர்ப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.