
மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து! ஸ்தலத்தில் பலி
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பகுதியை நோக்கிச் சென்ற காரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதியத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பங்குடாவெளியைச் சேர்ந்தவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.