தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட முன்னாள் இராணுவத் தளபதி கைது! (காணொளி)
உந்துருளியில் சென்று பெண்களின் தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்டுச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் கர்னல் ஒருவர் அத்துருகிாிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இவர் கொள்ளையடித்த தங்க நகைகள் யாவற்றையும் நகைகள் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அடகு வைத்த 60 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிாிய காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.
மேற்படி சந்தேக நபர் கடுவளை நீதிதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அத்துருகிாிய காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.