தாயாாின் மரணச் சடங்கில் இரு சகோதரர்கள் பலி!
மீாிகம-கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயாாின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட சிலருடன் மதுபானம் அருந்திய சகோதரர்கள் இருவர் உயிாிழந்துள்ளனர்.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய சட்ட விரோத மதுபானத்தை அருந்தியதன் காரணமாகவே இவர்கள் உயிாிழந்துள்ளதுடன் இதனை அருந்திய மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்தார்.
நேற்று முன் தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு உயிாிழந்த இருவரும் 54 மற்றும் 47 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சசோகதரர்கள் ஆவர்.