இனி பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டினால் சட்ட நடவடிக்கை
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகையை தவிர பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
ஒருசிலர் பொதுஇடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு செல்வதால் சூழல் மாசுபடுவதாக பலர் கூறியமைக்கு அமைவாகவே நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் நேற்றைய தினம் நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் வேலு யோகராஜ் ஊடாக வைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனைக்கு அமைய நேற்று14/12/2020 திங்கட்கிழமை இப்பலகைகள் வைக்கப்பட்டது.
இப்பலகையை தவிர ஏனைய பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலுயோகராஜ் குறிப்பிட்டுள்ளார்.