வவுனியாவிலும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டன பாடசாலைகள்
கொவிட் 19 தொற்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வவுனியாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பரிசோதனை நடத்தும் வகையில் வவுனியா சுகாதாரபணிமனை அதிகாரிகளின்(PHI and MOH) அறிவுறுத்தலுக்கு அமைய கல்விச்செயலாளரின் ஆலோசனைக்கு அமைய மறு அறிவித்தல் வரை இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
வ/ சி சி த க பாடசாலை, (CCTM school), வ/காமினி ம வித்தியாலயம், வ/ தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வ/ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம். ஆகிய பாடசாலைகள் மூடப்படுகின்றது என வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.