
இலங்கையில் கைதிகளிடையே வேகமாக பரவுகிறது கொரோனா
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாவது அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் 122 கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மொத்தமாக 3,087 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று கண்டறியப்பட்ட 122 பேரும் ஆண் கைதிகளாவர்.
தற்போது 2,414 ஆண் கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேபோன்று 189 பெண் கைதிகளும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 103 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.