1 கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் சுங்கப் பிாிவினர் வசம்!

1 கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் சுங்கப் பிாிவினர் வசம்!

பெரிய வெங்காயம் என்று தெரிவித்து புறக்கோட்டை வர்த்தகர் ஒருவர் டுபாயில் இருந்து கொண்டு வந்த 1 கோடியே 90 லட்சம் ரூபா பெறுமதியான பச்சை மஞ்சள் அடங்கிய 4 கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன இதனை எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

இதன்போது 25 ஆயிரம் கிலோ கிராமுக்கும் அதிக மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்து இடம் நகர்த்தப்பட்ட 700 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் காவல் துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.