பேலியகொட மீன் சந்தை மீள் திறப்பு!

பேலியகொட மீன் சந்தை மீள் திறப்பு!

பேலியகொட மீன் சந்தையை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்; எதிர்வரும் புதன்கிழமை முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பாக கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் புதன்கிழமை சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி சந்தை செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.