அவிஸ்ஸாவளை ஏற்றுமதி வலயத்தில் புதிய தொற்றாளர்கள் 142 பேர்!
அவிஸ்ஸாவளை - சீதாவக்கை ஏற்றுமதி வலயத்தில் புதிய தொற்றாளர்கள் 41 பேர் நேற்று (13) கண்டறியப்பட்டதுடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் ஹங்வெல்ல - தெஹியோவிட்ட, எஹலியகொட மற்றும் ருவன்வெல்ல ஆகிய சுகாதார மருத்துவ பிாிவுகளைச் சேர்ந்த நபர்களாவர்.
இதேவேளை எஹலியகொட பிரதேசத்தில் 09 பேர் நேற்று தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்போது அப்பிரதேசத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 250 ஆக உயர்வடைந்துள்ளது.