மின் கம்பத்தில் ஏறி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய நபர் கைது!

மின் கம்பத்தில் ஏறி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய நபர் கைது!

தனது வீட்டுக்குச் செல்வதற்குப் பாதையொன்று இன்மை காரணமாக மாத்தறை நகர சபைக்கு முன்னால் அமைந்துள்ள மின் கம்பத்தில் ஏறி நபரொருவர் இன்று (14) காலை எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

மாத்தறை, பொல்ஹேனை பிரதேசத்தைச் சேர்ந்த  45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

மாத்தறை தீயணைப்புப் படையினாின் உதவியுடன் மேற்படி நபர் கீழே இறக்கப்பட்டதையடுத்து  மாத்தறை காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.