அதிகாரிகள் சபையினை தெரிவு செய்ய குழுவொன்றை நியமித்தது ஐ.தே.க..!

அதிகாரிகள் சபையினை தெரிவு செய்ய குழுவொன்றை நியமித்தது ஐ.தே.க..!

அடுத்த வருடத்திற்கான அதிகாரிகள் சபையினை தெரிவு செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தவுள்ள உறுப்பினர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வார காலப்பகுதியில் அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு உரித்தான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்வது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என கட்சியின் செயலாளர் சமல் செனரத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.