
கண்டியில் தொடர்ந்தும் மூடப்பட்டிருந்த 3 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 45 பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அண்மையில் 42 பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
இந்நிலையில் தொடர்ந்தும் மூடப்பட்டிருந்த மூன்று பாடசாலைகளும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
திரித்துவக்கல்லூரி, தக்ஷிலா வித்தியாலயம், மற்றும் கலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு தென்மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.