ஜப்பானிய யுவதி விவகாரத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்..!

ஜப்பானிய யுவதி விவகாரத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்..!

ஜப்பானிய யுவதியை கடத்தியதாக தெரிவிக்கப்படும் இலங்கையை சேர்ந்த இளைஞரின் சகோதரியை திருமணம் செய்துக்கொள்ளவிருந்த இளைஞரை இனந்தெரியாத சிலர் தாக்கியுள்ளனர்.

குறித்த இளைஞர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய யுவதி கடத்தப்பட்ட விவகாரத்தில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறpத்த ஜப்பானிய யுவதியின் தாயாரின் இலங்கையிலுள்ள காதலரான கொஸ்த்தா எனும் நபரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தாக்குதலால் காயங்களுக்குள்ளான இளைஞரின் உறவினர்கள் காவல் துறையினரிடம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து ஜப்பானிற்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்ற 23 வயதுடைய இளைஞர் அந்நாட்டை சேர்ந்த 15 வயது யுவதியை இலங்கைக்கு கடத்திய நிலையில், யுவதியின் தாயாரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சுமார் 6 மாதங்களின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.