ஒரு கோடி ரூபா பெறுமதியான மஞ்சளைக் கடத்திய இந்தியர்கள் மூவர் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியான மஞ்சளைக் கடத்திய இந்தியர்கள் மூவர் கைது!

கல்லாறு முனையை அண்மித்த கடற்பரப்பில் ஒரு கோடி ரூபா பெறுமதி வாய்ந்த மஞ்சள் பொதியுடன் இந்தியர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (13) கல்லாறு முனையிலிருந்து சுமார் 27 மைல் தொலைவில் இந்திய படகொன்றின் மூலம் குறித்த மஞ்சளை நாட்டிற்குள் கடத்த முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த படகில் 2404 கிலோ 300 கிராம் மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டதோடு கைதாகிய இந்தியர்கள் மூவரும் 37, 40, 49 வயதுடையவர்களென தொிவிக்கப்படுகிறது.