O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோராகவுள்ள பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் இடைநிறுத்தம்

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோராகவுள்ள பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் இடைநிறுத்தம்

இம் முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோராகவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.