திடீரென ஏற்பட்ட தீ விபத்து: விரைந்து செயற்பட்ட பொலிஸாரும் பொதுமக்களும்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர ஆற்றுப்பகுதியை அண்மித்த வனப்பகுதியே நேற்று மாலை தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விரைந்த ஹட்டன் பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
கருப்பன் தேயிலை மரங்களை கொண்ட குறித்த வனப்பகுதி மான் போன்ற அரிய வகை மிருகங்களின் வாழ்விடமாகவும் ருவான்புர வனம் காணப்படுகிறது
இனந்தெரியாதோரல் தீ வைத்தாருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் காடுகளுக்கு தீ வைப்பது கடும் தண்டனைக்குறிய குற்றச்செயல் என தெரிவித்த ஹட்டன் பொலிஸார் இவ்வாறு தீ வைப்போரை அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.