நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சாதிக்காய்!
வாசனைப் பொருளாகக் கருதப்படும் சாதிக்காயை அதிகளவில் பயன்படுத்துவதில் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வைத்தியர்கள் சாதிக்காயை அதிகளவில் பயன்படுத்துவதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
அத்தோடு மன ரீதியான உளைச்சளையும் இது ஏற்படுத்துவதாக தொிவிக்கப்படுகிறது.
இதனால் 10 கிராமிற்கு அதிகமான சாதிக்காய்ப் பாவனையானது மனித உடலை பாதிப்படையச் செய்கிறது.
இதன் அதிக பாவனையால் குமட்டல், தலைச்சுற்று போன்றன ஏற்படுவதோடு மத்திய நரம்பு மண்டலமும் இதனால் பாதிப்படைகிறது.
சாதிக்காயை ஏற்ற அளவில் பாவிப்பதால் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாமெனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.