மேலும் 504 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 504 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
டுபாயிலிருந்து 144 பேரும், மாலைதீவிலிருந்து 31 பேரும், டோஹாவிலிருந்து 51 பேரும், சிட்னியிலிருந்து 75 பேரும் மற்றும் நரிட்டோவிலிருந்து 203 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்துப் பயணிகளும் தனியார் மருத்துவமனை ஊழியர்களால் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.