வேலைத்தளங்களிலும், காரியாலயங்களிலும் எவ்வாறு கொரோனா பரவுகின்றது..?

வேலைத்தளங்களிலும், காரியாலயங்களிலும் எவ்வாறு கொரோனா பரவுகின்றது..?

வேலைத்தளங்களிலும், காரியாலயங்களிலும் எவ்வாறு கொவிட்-19 தொற்று பரவுகின்றது என்பது குறித்து காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண விளக்கமளித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் விசேட நிபுணர்கள் கூறுவதற்கு அமைய, வேலைத்தளங்கள் மற்றும் காரியங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து சிற்சில விடயங்களை பயன்படுத்தும்போது நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக காலையில் வேலைத்தளத்திற்கு அல்லது காரியாலயத்திற்கு செல்கின்ற நேரம்முதல், முகக்கவசத்தை அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை அவர்கள் பேணுகின்றனர்.

ஆனால், உணவு உட்கொள்ளும் வேளையில் முகக்கவசத்தை நீக்கிவிட்டு, ஒன்றாக உணவு உட்கொள்வதுடன், ஒரே பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர்

எனவே, உணவு உட்கொள்ளும் வேளையில் நோய் பரவல் ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

இதேநேரம், சில சந்தர்ப்பங்களில் வேலைத்தளங்களில் ஒன்றாக இணைந்து புகைபிடிப்பது, வெற்றிலையை பயன்படுத்துவது, மதுபானம் அருந்தும்போது கோப்பைகளை ஒன்றாக பயன்படுத்துவதும் நோய் பரவலுக்கு காரணமாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்