பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார் சரத் வீரசேகர
குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்களில் ஈடுபவோர் கைது செய்யப்பட்டு பின்னர், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்.
இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற நபர்கள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 8 ஆம் திகதி வேவெல்தெனிய பகுதியில் ஒரு இளைஞன் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூன்று பேரும் வந்த முச்சக்கர வண்டியும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கத்தி பொலிஸ் காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.