பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா சம்பளம் கிடைக்குமென தாம் நம்புவதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

1000 ரூபா சம்பளத்தை ஜனவரி தொடக்கம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.