தொடரும் விபத்துக்கள்! சமிஞ்சை விளக்கு பொருத்துமாறு கோரிக்கை
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த சுற்றுவட்டமானது வட மாகணம் மற்றும் தென் பகுதிகளில் இருந்து வருகை தரும் அனைத்து வாகனங்களும் சந்திக்கும் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.
இதனால் அதிகமான வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுவதுடன் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் இடம்பெற்றுவரும் நிலமை நீடித்து வருகின்றது.
கடந்த இரு தினங்களிற்கு முன்னரும் குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறன விபத்து சம்பவங்கள் தினமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.