மாத இறுதியில் ஊரடங்கா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

மாத இறுதியில் ஊரடங்கா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 22ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் எவ்வாறாயினும் இதுவரையில் தனிமைப்படுத்தவோ அல்லது தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை பிறப்பிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.