கொரோனா தொற்றியுள்ள மேலும் 8 கர்ப்பிணித் தாய்மார் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றியுள்ள மேலும் 8 கர்ப்பிணித் தாய்மார் கண்டுபிடிப்பு

களுத்தறை - அட்டுலுகம பகுதியில் உள்ள 80 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே பல மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.