நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் மேலும் ஒரு கொவிட் 19 மரணம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கொவிட் நோயால் மரணித்தோர் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் முல்லேரியா போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு உயர் குருதி அழுத்தம் மற்றும் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்;ட நியுமோனியா காய்ச்சல் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 762 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 762 கொவிட் 19 நோயாளர்களில் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 687 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 75 பேரும் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைஇ பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 747 ஆக உயர்வடைந்துள்ளது.
8 ஆயிரத்து 397 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, கொவிட் 19 தொற்றில் இருந்து 570 பேர் நேற்று குணமடைந்து மருத்துமனைகளில் இருந்து வெளியேறினர்.
இதன்படி, இலங்கையில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அட்டுலுகம பகுதியில் 82 கர்ப்பிணி தாய்மார்களுக்கு என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகி இருப்பதாகஇ பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்டங்களிலும் கோரோனா வைரஸ் கொத்தணிகளாக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அநுராதபுரம் - கஹடகஸ்திஹிலிய நகரில் கோரோனா வைரஸ் தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
அந்த நகரில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த நபருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கஹடகஸ்திஹிலிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த கொரோனா வைரஸ் தொற்றுறுதியான நபர் அக்குறனை பகுதியில் இருந்து கஹடகஸ்திஹிலிய நகருக்கு சென்று அங்குள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும் அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் சிறு வர்த்தகர் ஒருவருக்கும் கொவிட்19 தொற்றுறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.